இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜுன் மாதம் மோதல் மூண்டது. 12 நாட்கள் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
இதனிடையே, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்கள் நாட்டை சேர்ந்த பலரையும் ஈரான் கைது செய்து வருகிறது.
கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க, உஷாரா இருங்க விஜய் அண்ணா - “திருப்பாச்சி” பட நடிகை
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்த தமிழக வெற்றிக்கழக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கியுள்ளார்.
20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்
ஜப்பானில் இன்று நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ் மற்றும் செக் நாட்டின் 18 வயது இளம் வீராங்கனையான தெரசா வாலண்டோவா ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், முதல் செட்டை 6-0 என்ற புள்ளி கணக்கில் லெய்லா வென்றார். எனினும், அடுத்த செட்டை 5-7 என்ற புள்ளி கணக்கில் தெரசா கைப்பற்றினார். இதனால், வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டை நோக்கி போட்டி சென்றது.
இதில், தெரசா கடுமையாக போராடியபோதும், 6-3 என்ற புள்ளி கணக்கில் செட்டை கைப்பற்றி லெய்லா வெற்றி பெற்று சாம்பியன் பட்டமும் தட்டி சென்றுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. தேனி, நீலகிரியில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனமழை எதிரொலி; முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவசரகால செயல்பாட்டு மையத்தின் நடவடிக்கைகளையும் கேட்டு அறிந்துள்ளார்.
இந்த மையம் 24 மணிநேரமும் செயல்பட கூடிய மையம் ஆகும். வெள்ளம், மழை, புயல் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட விசயங்கள் பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த மையம் தகவல்களை அளிக்கும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உள்ளார். பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகளை பற்றியும் அப்போது அவர் கேட்டறிந்து உள்ளார்.
ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு
சென்னையை அடுத்த ஆவடி அருகே தண்டுரை விவசாயி தெருவில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் இன்று வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்தது.
இந்த வெடிவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைத்து உயிரிழந்த 4 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளியை முன்னிட்டு வீட்டிலேயே பட்டாசுகளை சேமித்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
சினிமா கெரியரில் முதல் முறையாக அதை செய்த ராசி கன்னா
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் தெலுங்கில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் இளம் நடிகைகள் ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா நடிக்கின்றனர். ஹரிஷ் சங்கர் இந்த படத்தை இயக்குகிறார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதை தயாரிக்கிறது.
" அவர்தான் அடுத்த அல்லு அர்ஜுன்"...பிரபல தயாரிப்பாளர்
ஒரு காலத்தில் நடிகராக இருந்து இப்போது தயாரிப்பாளராக இருக்கும் பந்த்லா கணேஷ், ஐதராபாத்தில் தெலுங்கு பிரபலங்களுக்காக ஒரு பிரமாண்டமான தீபாவளி பார்ட்டி நடத்தினார். இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் , தேஜா சஜ்ஜா போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.