ஜப்பான் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை சாம்பியன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்
ஜப்பானில் இன்று நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ் மற்றும் செக் நாட்டின் 18 வயது இளம் வீராங்கனையான தெரசா வாலண்டோவா ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், முதல் செட்டை 6-0 என்ற புள்ளி கணக்கில் லெய்லா வென்றார். எனினும், அடுத்த செட்டை 5-7 என்ற புள்ளி கணக்கில் தெரசா கைப்பற்றினார். இதனால், வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டை நோக்கி போட்டி சென்றது.
இதில், தெரசா கடுமையாக போராடியபோதும், 6-3 என்ற புள்ளி கணக்கில் செட்டை கைப்பற்றி லெய்லா வெற்றி பெற்று சாம்பியன் பட்டமும் தட்டி சென்றுள்ளார்.
Update: 2025-10-19 14:13 GMT