கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளிலும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளிலும் சில நாட்களாக கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.

இதில், பெங்களூருவின் பல பகுதிகளில், தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகளும் அதிக அவதிக்கு உள்ளானார்கள். அரையடி உயரத்திற்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் பகுதியளவு மூழ்கின. இந்நிலையில், பெங்களூருவில் தொடரும் கனமழையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2025-05-20 03:46 GMT

Linked news