இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கர்நாடகா: 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான "ரெட் அலர்ட்"
கர்நாடகாவின் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தர கன்னடம், உடுப்பி, தட்சிண கன்னடம், குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு மற்றும் ஹாசன் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இரவில் மிக அதிக மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மேற்பரப்பு காற்று வீசும் என்றும், திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை ?
சென்னை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் தாமதம்
சென்னை விமான நிலையம் பகுதியில் பெய்து வரும் மழை, காற்று காரணமாக 10 விமானங்கள் உரிய நேரத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன; பின்னர் வானிலை சரியானதும் தரை இறங்கின.
ரவிமோகனுடனான பிரிவுக்கு 3வது நபரே காரணம்- ஆர்த்தி பரபரப்பு அறிக்கை
நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி தம்பதியரின் பிரிவும். பாடகி கெனிஷாவை 'என்னுடைய வாழ்வில் ஒளியாக வந்தவர்' என்று ரவிமோகன் சொன்னதும் பரபரப்பு விஷயமாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் ஆர்த்தி பரபரப்பு அறிக்கையை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை - அமைச்சர் சிவசங்கர்
ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் பரிசீலனை செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் மல்லாங்கோட்டை கிராமத்தில் கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் மண்ணில் புதைந்தனர். இதில் அவர்கள் மூச்சு திணறி பலியாகி உள்ளனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது. அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.