விஜயின் பரப்புரையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

விஜயின் பரப்புரையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்


தவெக தலைவர் விஜயின் பரப்புரையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரும் வாகனங்கள் கங்களாஞ்சேரி வடகண்டம் விளமல் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூரிலிருந்து நாகை வரும் வாகனங்கள் அம்மையப்பன் வெள்ளகுடி புலிவலம் வழியாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார்குடியிலிருந்து வரும் வாகனங்கள் வெள்ளக்குடி புலிவலம் வாழ வாய்க்கால் வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-09-20 05:51 GMT

Linked news