இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
''ஓஜி'': வெளியானது ஸ்ரேயா ரெட்டியின் அசத்தல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ஓஜி. சுஜீத் இயக்கி உள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தனுஷின் ''இட்லி கடை'' பட டிரெய்லர் வெளியானது
தனுஷ் நடித்துள்ள ''இட்லி கடை'' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது
நடிகர் மோகன்லாலுக்கு, 2023ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓடிடியில் வெளியாகும் ''சுமதி வளவு''...எதில்,எப்போது தெரியுமா?
திகில் திரைப்படமான ''சுமதி வளவு'' விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. வருகிற 26-ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
அந்த நடிகர் மீது எனக்கு கிரச...ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை - மனமுடைந்த நடிகை: யார் தெரியுமா?
நடிகை மகேஸ்வரியை நினைவிருக்கிறதா? ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். சமீபத்தில், ஜெகபதி பாபு தொகுத்து வழங்கி வரும் ''ஜெயம்மு நிச்சயயம்மு ரா'' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சிவனின் ஓவியத்தை வரைந்த பிரபல நடிகர் - வீடியோ வைரல்
பிரபல தெலுங்கு ஹீரோ சுதீர் பாபு. இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு கலையும் இருக்கிறது. அதுதான் ஓவியக் கலை. சமீபத்தில், அவர் சிவ பெருமானின் ஓவியத்தை வரைந்தார்.
வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்த நட்சத்திர நடிகை...யார் தெரியுமா?
திரையுலகில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமன ஒன்று. ஆனாலும் பலர் இதற்கு ஆசைப்படுகிறார்கள். சிலர் வேறு துறையில் வேலை செய்துகொண்டிருந்தபோதும் அதை விட்டுவிட்டு சினிமாவில் நுழைகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று 'நட்சத்திரங்களாக' மாறி இருக்கிறார்கள். இந்த நடிகையும் இதில் ஒருவர்தான். அவர் வேறு யாரும் இல்லை சோஹா அலி கான்தான்.
ஓடிடியில் வெளியாகும் ஸ்ரீலீலாவின் ஜூனியர்...எங்கு, எப்போது தெரியுமா?
ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் கிரீத்தி ரெட்டி மற்றும் ஸ்ரீலீலா நடித்த ஜூனியர் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 22-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நாகையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் புகைப்பட தொகுப்பு:-