இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
குமரி மாவட்டம் சாமிதோப்பில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
52 டன் எடை கொண்ட இந்திய விண்வெளி மையம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டு சென்று நிறுவப்பட உள்ளது. இதற்கான முதல் ராக்கெட் வருகிற 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும். பின்னர் 4 ராக்கெட் மூலம் விண்வெளி மையம் எடுத்து செல்லப்பட்டு 2035-ம் ஆண்டு நிறுவப்படும். இதற்கான சோதனை இந்த ஆண்டு வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் மார்க் 3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட தொலை தொடர்பு செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.
Update: 2025-10-20 04:58 GMT