இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சம்யுக்தாவின் பான் இந்திய படம்...வைரலாகும் பர்ஸ்ட் லுக்
தமிழில் இவர் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இவர் நடிக்கும் பான் இந்திய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. ’தி பிளாக் கோல்டு’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை யோகேஷ் இயக்குகிறார்.
கர்நாடகா: முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் 13 பேர் மயக்கம்
புட்டூர் எம்.எல்.ஏ. அசோக் குமார் ராய் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
இதனால், அவரை காண திரளான மக்கள் கூடினர். இந்நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சி நடந்த மேடைக்கு வந்துள்ளார். பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, சேலைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டன.
பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை மையமாக கொண்டு இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நகரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் இருந்து 431 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 11.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
இரவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் மக்கள்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு, காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புதிய ஆடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி கொண்டு, மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை ஒரு மணிநேரமும், இரவில் ஒரு மணிநேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி உள்ளது. இதன்படி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகையில் வடக்கே அகல் விளக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில், தமிழகத்தில் வானை வண்ணமயம் ஆக்கும் பட்டாசுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
வடகிழக்கு பருவமழை: துரைப்பாக்கத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை இன்று துரைப்பாக்கத்தில் வெள்ள நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் துரைப்பாக்கத்தில் வெள்ள நீர் வடிகால் பணிகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
லட்சக்கணக்கான மக்களை பாதுகாத்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னை புகழ்ந்து பேசினார் என்றும் டிரம்ப் அப்போது கூறினார். அவர் தொடர்ந்து கூறும்போது, 2 நாடுகள் மீதும் 200 சதவீத வரிகளை விதிக்க போகிறேன். இதனை எதிர்கொள்வது என்பது உங்களால் முடியாதது. உங்களுடன் நாங்கள் வர்த்தகமும் செய்ய போவதில்லை என 2 நாடுகளிடமும் நான் கூறினேன். இதன்பின்னர், 24 மணிநேரத்தில் நான் போரை நிறுத்தி விட்டேன் என பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த மே 10-ந்தேதி முதன்முதலாக சமூக ஊடகத்தில் டிரம்ப், இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடவடிக்கையால், இந்தியாவும் பாகிஸ்தானும் முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய ஒப்பு கொண்டன என பதிவிட்டார். தொடர்ந்து பலமுறை இதனை கூறி வருகிறார். பல போர்களை நிறுத்தியதற்காக தனக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்றும் இடையிடையே கூறி வருகிறார்.
எனினும், டிரம்பின் இந்த பேச்சை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறி வருகிறது.
‘காட் மோட்’ பாடலுக்கு நடிகை ருக்மிணி வசந்த் கொடுத்த ரியாக்சன்...வைரல்
‘கருப்பு’ படத்தின் முதல் பாடலான காட் மோட் சமீபத்தில் வெளியானநிலையில், அதனை பார்த்து நடிகை ருக்மிணி வசந்த் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
4-வது நாளாக உச்சம் கண்ட இந்திய பங்கு சந்தைகள்; சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்வு
இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்று உச்சமடைந்து காணப்பட்டன. இதன்படி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 411.18 புள்ளிகள் உயர்ந்து (0.49 சதவீதம்) 84,363.37 புள்ளிகளாக இருந்தது. இன்றைய நாளில் அது 704.37 புள்ளிகள் வரை உச்சமடைந்து 84,656.56 புள்ளிகளாகவும் இருந்தது.