நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025

நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதனால், சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 7வது முறையாகும். அணைக்கு நீர் வரத்து 14 ஆயிரத்து 420 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது.

Update: 2025-10-20 09:54 GMT

Linked news