`எச்1-பி' விசா கட்டணம் புதிதாக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
`எச்1-பி' விசா கட்டணம் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்து உள்ளார். அதாவது வெளிநாட்டினருக்கான எச்1-பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்து போட்டார். பின்னர் அவர், 'இந்த நடவடிக்கை அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று கூறினார்.
Update: 2025-09-21 04:00 GMT