2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி 


இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பது குறித்து ரோகித் சர்மா அளித்த பேட்டியில், “2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும். உலகக் கோப்பை போட்டியை தவற விடும் போதுதான். அதன் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். அப்போது தான், உலகக் கோப்பை பயணத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இல்லை என்பதை உணர்வீர்கள்” என்று கூறினார்.

Update: 2026-01-22 04:40 GMT

Linked news