நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் உள்ள பிள்ளையார் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறுகிறது.
Update: 2026-01-23 04:48 GMT