திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது ரத சப்தமி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் வாகன சேவையாக, அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது. ஜொலிக்கும் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்தும் வழிபட்டனர். காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடைபெற்றது.

Update: 2026-01-25 05:51 GMT

Linked news