இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2026-01-25 09:49 IST


Live Updates
2026-01-25 06:00 GMT

கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம் - மார்க் கார்னி திட்டவட்டம் 


டிரம்ப் மிரட்டலுக்கு பதிலடியாக ‘சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்' என நாட்டு மக்களுக்கு கனடா பிரதமர் வீடியோ வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.  

2026-01-25 05:51 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது ரத சப்தமி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் வாகன சேவையாக, அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது. ஜொலிக்கும் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்தும் வழிபட்டனர். காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடைபெற்றது.

2026-01-25 05:49 GMT

மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்: அன்புமணி ராமதாஸ்

அன்னைத் தமிழுக்காக துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் சுமந்தும், குண்டாந்தடிகளால் தாக்குதலுக்கு ஆளாகியும். சிறைக் கொட்டடிகளில் நோய்வாய்ப்பட்டும் தங்களின் இன்னுயிரை ஈந்தது உள்ளிட்ட மொழிப்போர் ஈகியர்களை நினைவு கூறும் வகையில் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்கள் செய்த ஈகங்களை போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன். எந்த நோக்கத்திற்காக அவர்கள் தங்களின் உயிர்களை ஈகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை அடைவதற்காக தொடர்ந்து போராட நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று அன்புமணி கூறியுள்ளார்.

2026-01-25 05:27 GMT

த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2026-01-25 05:18 GMT

16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு 


இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-01-25 05:15 GMT

மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம் - டிடிவி தினகரன் பதிவு 


இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிரீந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

2026-01-25 05:10 GMT

தேசிய வாக்காளர் தினம்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி 


இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2026-01-25 05:09 GMT

கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி: முதல்-அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு 


சேலத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

2026-01-25 05:04 GMT

வாக்கு திருட்டு; தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பாய்ச்சல் 


பா.ஜனதா தோல்வியடையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வாக்காளர்கள் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

2026-01-25 04:40 GMT

ஆபாச வீடியோ வழக்கு; சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் விடுவிப்பு ரத்து 


பூபேஷ் பாகல் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்