இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் திடீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு


இமாச்சலப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.பார்வதி நதி ஆபத்தான அளவில் நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Update: 2025-06-26 04:19 GMT

Linked news