இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே பழுதால் சாலையில் நின்ற பஸ்சின் மீது தனியார் சொகுசு வாடகை கார் மோதி விபத்திற்குள்ளானது. காரின் முன்பகுதி சேதமானதாக கூறி பஸ் ஓட்டுநர் சேகரை கார் ஓட்டுநர் சாமுவேல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கார் ஓட்டுநர் சாமுவேல் தாக்கியதில் காயமடைந்த பஸ் ஓட்டுநர் சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் சாமுவேல் மீது வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் தேளூர் பகுதியில் வீட்டுக்கு புதிய மின் இணைப்பு மீட்டர் பெட்டி பொருத்த ரூ.1000 லஞ்சம் கேட்டு ரூ. 500 முன்பணமாக பெற்ற மின் பொறியாளர் அலுவலக வணிக உதவியாளர் சாமிநாதன் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.
விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர். ஆரத்தழுவி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு உள்ளிட்ட 4 பேரும் வரவேற்பு குளிர்பானத்தை அருந்தினர்.
திக்... திக்... நிமிடங்கள் பறந்துவிட்டன.நிம்மதியாக உணர்கிறேன். இவ்வளவு நாட்களாக பயத்தோடு இருந்தேன். இப்போது அது நிம்மதியாக மாறிவிட்டது. டிராகன் விண்கலம் பத்திரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த நிலையில் சுபான்ஷு சுக்லா மனைவி காம்னா பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம். ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம். எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு, பாடம் புகட்டியுள்ளோம் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கூறியுள்ளார்.
டிராகன் விண்கலத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சுபான்ஷு சுக்லா.
வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன் விண்கலத்தை நேரலையில் பார்த்து மெய்சிலிர்த்த சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர்.
275 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை ஜூன் 30ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை முழுவதும் 625 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 5 பணிமனைகளில் இருந்து 120 மின்சார தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்தில் 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்வர். விண்வெலியில் பயிர்கள் வளர்ச்சி குறித்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் ஆராய்ச்சி செய்கின்றனர். விண்வெளியில் 60 அறிவியல் பரிசோதனை, 31 வெளி நடவடிக்கையில் 4 பேரும் ஈடுபடுகின்றனர். குறைந்த புவி ஈர்ப்பு விசையில் உடலின் தசைகள் செயல்பாடுகல் குறித்தும் ஆராய்ச்சி நடக்கிறது.