வார விடுமுறையை முன்னிட்டு 945 சிறப்பு பஸ்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025

வார விடுமுறையை முன்னிட்டு 945 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு


வார விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலின்றி சொந்த ஊர் சென்று வர ஏதுவாக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்து வருகிறது.

அதன்படி, ஜூன் 27, 28, 29 ஆகிய தேதிகளில் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு ஆகிய இடங்களில் கூடுதலாக வெளி மாவட்ட பஸ்கள் இயங்கும்.

www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-06-26 04:41 GMT

Linked news