நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (27.06.2025)
நாளை (ஜூன் 27-ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
"கண்ணப்பா"
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ். காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.
Update: 2025-06-26 07:55 GMT