கோயம்பேடு அருகே அரசு பஸ் ஓட்டுநரை தாக்கிய கார் ஓட்டுநர் கைது
சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே பழுதால் சாலையில் நின்ற பஸ்சின் மீது தனியார் சொகுசு வாடகை கார் மோதி விபத்திற்குள்ளானது. காரின் முன்பகுதி சேதமானதாக கூறி பஸ் ஓட்டுநர் சேகரை கார் ஓட்டுநர் சாமுவேல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கார் ஓட்டுநர் சாமுவேல் தாக்கியதில் காயமடைந்த பஸ் ஓட்டுநர் சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் சாமுவேல் மீது வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2025-06-26 13:15 GMT