அடையாறு முகத்துவாரம் பகுதியில் முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025

அடையாறு முகத்துவாரம் பகுதியில் முதல்-அமைச்சர் இன்று மீண்டும் ஆய்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் அடையாறு ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது. அதற்கேற்ப, சமீபத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அவருடன் மக்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் உயரதிகாரிகளும் சென்றிருந்தனர். பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் எந்த நிலையில் உள்ளன என அப்போது அவர் பார்வையிட்டார். அதுபற்றி அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உள்ளார்.

Update: 2025-10-26 04:06 GMT

Linked news