கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பு என தகவல்
பெங்களூருவை பொறுத்தவரை மாநகர எல்லையில் 39 லட்சம் வீடுகள் உள்ளன. இதுவரை 19 லட்சம் வீடுகளில் மட்டுமே கணக்கெடுப்பு பணி நடைபெற்றுள்ளது. 5 லட்சம் வீடுகளில் வசிப்போர் தங்களது கணக்கெடுப்பு விவரங்களை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தட்சிணகன்னடா, உத்தரகன்னடா மாவட்டங்களில் தலா 50 ஆயிரம் பேர் தகவல்களை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பல வீடுகள் பல நாட்களாக பூட்டியே கிடப்பதாகவும், இதனால் கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் பெங்களூருவில் 20 சதவீதம் மக்கள் உள்ளனர் என்றும் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தயானந்த் கூறினார்.
Update: 2025-10-26 04:49 GMT