முன்கூட்டியே உருவாகிறது புயல்; வானிலை ஆய்வு மையம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025

முன்கூட்டியே உருவாகிறது புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்

புயல் நாளை உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்த சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இதற்கு ஏற்கனவே அட்டவணையில் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே வருகிற 28-ந்தேதி அன்று மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-10-26 05:47 GMT

Linked news