குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக திருமண வயதை 18 ஆக குறைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஆண்களில் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ள நிலையில், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகள் பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான சீனர்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது.

Update: 2025-02-28 10:21 GMT

Linked news