இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-02-28 09:50 IST


Live Updates
2025-02-28 15:37 GMT

இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு எந்த நன்மையும் செய்வதில்லை என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஓயாமல் உழைக்கும்போது, பிறந்த நாள் விழாக்கள் ஒரு ஸ்பீடு பிரேக் போன்றது என்றும் பேசியுள்ளார். இந்த கூட்டணியில் விரிசல் வராது. அப்படி எதிர்பார்ப்பவர்களின் எண்ணத்தில்தான் மண் விழும் என அவர் பேசியுள்ளார்.

2025-02-28 15:20 GMT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, இரவு 8 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரவு 9.15 மணிக்கு நேரில் ஆஜராகும்படி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர் கூறியுள்ளார்.

2025-02-28 14:56 GMT

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவர் வேறிடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவரை பணியிடை மாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறையின் புதிய கலெக்டராக எச்.எஸ். ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

2025-02-28 14:45 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மிசா காலத்தில் அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். இன்றும் அதேபோன்று உழைத்து கொண்டிருக்கிறார். உழைப்பும், விழிப்பும் தமிழ்நாட்டை பாதுகாக்கிறது என வைகோ பேசியுள்ளார்.

2025-02-28 14:19 GMT

நடிகை பாலியல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு புறப்பட்டார். 

2025-02-28 13:35 GMT

வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசும்போது, நீடூழி வாழ்க என நெஞ்சார வாழ்த்துகிறேன் என தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

2025-02-28 13:29 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

2025-02-28 13:17 GMT

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இரவு 8 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரில் ஆஜராக இருக்கிறார். நடிகை அளித்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக உள்ள சூழலில், சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

2025-02-28 13:06 GMT

சென்னை ஆழ்வார்பேட்டையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்ற அவருடைய அண்ணன் மு.க. அழகிரி தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்