பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்- கார்கே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்- கார்கே வலியுறுத்தல்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்படுகிறது. மக்களவையில் ஏற்கனவே விவாதம் நடத்தப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடத்தப்பட்டது.
விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “பிரதமர் மோடி உண்மைகளை திரித்து பேசி மக்களை தவறாக வழிநடத்துகிறார். இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பிரதமர் நேரு கடிதங்கள் எழுதியதாக கூறியிருந்தார். நேரு குறித்து இவ்வாறு பேசியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
Update: 2024-12-16 11:42 GMT