‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நாளை தாக்கல் செய்ய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நாளை தாக்கல் செய்ய வாய்ப்பு
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அறித்த அறிக்கையில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம் என்றும், இதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தயாரித்துள்ளது. இந்த மசோதாவுக்கு, கடந்த 12-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
Update: 2024-12-16 14:26 GMT