பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுவாட்டு தீவு. வானுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ. தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

Update: 2024-12-17 03:54 GMT

Linked news