சென்னை திருவொற்றியூரில் மாநகர பஸ்சில் கதவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
சென்னை திருவொற்றியூரில் மாநகர பஸ்சில் கதவில் சிக்கி சிறுவனின் விரல் நசுங்கியது. பஸ்சின் கதவை மூடியபோது தாயின் கண்முன்னே சிறுவனின் விரல் நசுங்கியதாக கூறப்படுகிறது. சிறுவனும் தாயும் கதவை திறக்கும்படி கூச்சலிட்டும், நடத்துனர் கண்டுகொள்ளவில்லை என பயணிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சாலையில் நிறுத்தி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-12-17 13:18 GMT