நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025

நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

எனினும், இந்த கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இல்லை என்றும் இ-பாஸ் தேவையில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல் கொடைக்கானலிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Update: 2025-04-01 04:02 GMT

Linked news