தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர வழிவகை செய்யப்படுகிறது. அவ்வாறு சேரக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி, மத்திய அரசு நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, அதற்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தாமதமாக தொடங்கியது. ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்தவர்கள், இந்த இடஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.