இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-11-01 10:00 IST


Live Updates
2025-11-01 13:11 GMT

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பவுர்ணமி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 9.43 மணிக்கு தொடங்கி மறுநாள் (புதன்கிழமை) இரவு 7.27 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-11-01 12:37 GMT

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூலை வெளியிட்ட நிதி அமைச்சகம்: குறைந்ததா? அதிகரித்ததா? 

அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

2025-11-01 12:36 GMT

தெரு நாய் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்

இந்த நிலையில், தெரு நாய் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது;

"தமிழ்நாட்டில் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. நாய்கள் கருத்தடை திட்டத்திற்காக 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-11-01 12:35 GMT

ஆந்திரா கூட்ட நெரிசல் - பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

"ஆந்திரா ஸ்ரீகாகுளம் கோவில் கூட்ட நெரிசலில் 9 பேர் பலியான சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்த‌வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”

2025-11-01 08:46 GMT

செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது இதற்காகத்தான்... முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

செங்கோட்டையன், ஏ1 என கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், கோடநாடு வழக்கில் ஆதாரம் இருந்தால் பழனிசாமியை பிடித்து உள்ளே போடுங்கள் என்று கூறினார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நடக்கிறது. போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கட்டும். பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது இந்த தி.மு.க. அரசு. அதனால், பணம் கொடுப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது என்றும் அவர் கூறினார்.

2025-11-01 08:12 GMT

எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்றார். அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியும் இன்று விளக்கம் அளித்து உள்ளார்.

2025-11-01 07:36 GMT

இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா: பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவின் நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கேரள சட்டசபையில் விதி 300-ன் கீழ் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை கேரளா அடைந்து சாதனை படைத்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

நூறாண்டுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னான தொடக்க ஆண்டுகளில் நீண்ட, நெடிய போராட்டங்கள் மேற்கொண்டு இதனை அடைந்திருக்கிறோம். அந்த போராட்டங்களின் விளைவால், ஒருங்கிணைந்த கேரளா உருவானது.

2025-11-01 07:21 GMT

ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 9 பேர் பலியான சோகம்

ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். தகவல் அறிந்து மாநில வேளாண் மந்திரி கே. அச்சன் நாயுடு அந்த பகுதிக்கு சென்றுள்ளார்.

2025-11-01 06:57 GMT

செங்கோட்டையனை நீக்கியது ஏன் ? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு விளக்கம்

திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதிமுக குறித்து பேச தகுதி இல்லை. சட்டப்பேரவையில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசியதில்லை. என தெரிவித்துள்ளார்.

2025-11-01 06:21 GMT

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன் பேட்டி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சி வலிமையோடு இருக்க அயராது பணியாற்றினேன். ஜெயலலிதா வழியில் கட்சியில் என்னை அர்ப்பணித்து கொண்டு பயணித்தவன். அ.தி.மு.க.வுக்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன். கட்சி உடைந்து விட கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

நான் விதித்தது கெடு அல்ல. பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூறினேன். கட்சி ஒன்றிணைய தொடர்ந்து வலியுறுத்தினோம். 10 நாட்களில் பேச்சு தொடங்கி, யாரை சேர்க்க வேண்டுமென பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம் என்றேன்.

Tags:    

மேலும் செய்திகள்