அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன் பேட்டி
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சி வலிமையோடு இருக்க அயராது பணியாற்றினேன். ஜெயலலிதா வழியில் கட்சியில் என்னை அர்ப்பணித்து கொண்டு பயணித்தவன். அ.தி.மு.க.வுக்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன். கட்சி உடைந்து விட கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
நான் விதித்தது கெடு அல்ல. பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூறினேன். கட்சி ஒன்றிணைய தொடர்ந்து வலியுறுத்தினோம். 10 நாட்களில் பேச்சு தொடங்கி, யாரை சேர்க்க வேண்டுமென பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம் என்றேன்.
Update: 2025-11-01 06:21 GMT