அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூலை வெளியிட்ட நிதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூலை வெளியிட்ட நிதி அமைச்சகம்: குறைந்ததா? அதிகரித்ததா?
அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-11-01 12:37 GMT