ஆபரேசன் சாகர்பந்து... இலங்கையில் சிக்கி தவித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025

ஆபரேசன் சாகர்பந்து... இலங்கையில் சிக்கி தவித்த இந்திய பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளுடன் விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது. எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்தது.

இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளும் கடந்த 5 நாட்களாக கொழும்பு விமான நிலையத்திலேயே சிக்கி தவித்தனர்.

Update: 2025-12-01 04:50 GMT

Linked news