இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தொடர் மழை காரணமாக சென்னை பல்கலை.யில் நாளை (டிச. 02) நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான ஆசாராம் பாபு, மருத்துவ சிகிச்சை என ஜாமின் பெற்று அகமதாபாத், ஜோத்பூர், ரிஷிகேஷ் என பல ஊர்களுக்குச் சுற்றிக் கொண்டு இருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். இருவேறு பாலியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஆசாராம் பாபுவின் மருத்துவ சிகிச்சைக்காக குஜராத் மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்கள் 6 மாத ஜாமின் வழங்கின.
விழுப்புரம்: செஞ்சியில் கார் மீது சிலிண்டர் லாரி மோதிய விபத்தில், புதுவை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர்கள் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் சென்ற இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி; சிதறிய கேஸ் சிலிண்டர்களை தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் 6.35 கோடி [99.20%] எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. 5.86 கோடி படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை.என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்'' `திரௌபதி 2’ வில் பாடல் பாடியதற்கு சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி பரபரப்பு பதிவ்ட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எதிரொலி.. சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சக்கரம் பிரச்சினையால் கீழே இறங்க முடியாமல் 45 நிமிடம் நேரமாக வானில் வட்டமடித்தது.45 நிமிடங்கள் வட்டமடித்த நிலையில் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிரங்கியது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.2) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
சென்னையில் காலை 6 மணி முதல் மழை பெய்துவரும் நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.