கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025
கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், வேளாண் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-12-01 05:31 GMT