கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதன்பின்னர், தனித்தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, கச்சத்தீவு விவகாரத்தில் முழுமையாக அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை.
39 எம்.பி.க்களும் ஏன் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை. தேர்தல் வரவுள்ள சூழலில், அதனை மனதில் வைத்து தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் ஏன்? தீர்மானம் கொண்டு வரவில்லை. தற்போது கொண்டு வந்திருக்கிறார்கள். இது தி.மு.க. அரசின் நாடகம் என குற்றச்சாட்டாக கூறியிருக்கிறார்.
Update: 2025-04-02 07:25 GMT