இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, வக்பு மசோதா மூலம் மசூதிகள் கையகப்படுத்தப்படும் என்பது தவறான பிரசாரம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. வக்பு வாரிய நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடாது என்று கூறினார்.

அதில், தலையிடுவதற்காக மசோதா கொண்டு வரப்படவில்லை என்றார். இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் கூறினார். மசோதா மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.

Update: 2025-04-02 07:55 GMT

Linked news