காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறதுசாதிவாரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிற்து.

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க கடந்த 24-ந் தேதியும் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Update: 2025-05-02 03:46 GMT

Linked news