இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
- விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு நிறுத்தம்
- நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு நடந்து வரும் பகுதியில் கனமழை
- ஜீப் மூலம் கேரவனுக்கு வந்து, விஜய் காத்திருப்பதாக தகவல்
- கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காண குவிந்த ரசிகர்கள்
- ஜிஎஸ்டி வரி - தன்னிச்சை முடிவு இல்லை"
- ஜிஎஸ்டி வரி - மோடி தனியாக மக்களுக்கு வரி விதிப்பது போல் பேசப்படுகிறது
- ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்
- அனைவருடைய கருத்துக்கள் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னையை அடுத்த ஒரகடம் அருகே, கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதிய கார் - 14 வயது சிறுமி உட்பட 2 பேர் பலியாகினர். அப்பளம் போல் நொறுங்கிய காரில், 2 பேர் உடல் நசுங்கி உயிரிந்தனர். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஸ்கிரீம் நிறுவனங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க, அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கொளுத்தும் கோடை வெயிலால், தமிழகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு, மூலப்பொருள்கள் தயாரிப்பு, காலாவதி தேதி போன்ற விபரங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- சீமானுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு
- நடிகை விவகாரத்தில், சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்
- நடிகை விவகாரம் - மோசடி, வல்லுறவு புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேல்முறையீட்டு மனு விசாரணை
- சீமானின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க, நடிகைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு
- விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்
அதிமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு கூடியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக உடனான கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின் அதிமுகவில் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் ஆகும்.
- உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் வாகனம் மீது மோதிய கார்
- சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்த போது விபத்து
- காரில் பயணம் செய்த மதுரை ஆதீனம் உட்பட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை
- விபத்துக்குள்ளான காருடன் சென்னைக்கு புறப்பட்டார் மதுரை ஆதீனம்
- "மதுரை ஆதீனம் கார் விபத்து - திட்டமிட்ட சதி"
- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு
- "கார் சேதமானாலும் இறை அருளால் மதுரை ஆதீனம் உயிர்தப்பினார்" மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தல்
- மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ் வெட்டி கொலை
- நகர் முழுவதும் பதற்றம், பலத்த போலீஸ் பாதுகாப்பு
- குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர் சுஹாஸ் ஷெட்டி
- சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
- பதற்றம் காரணமாக மங்களூருவில், மே 6ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி , கன்னியாகுமரி, விருதுநகர், கடலூர் மாவட்டங்களிலும் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.