நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்: விழிஞ்ஞத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்: விழிஞ்ஞத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணியளவில் திருவனந்தபுரம் வந்தார். தனி விமானம் மூலம் வந்த அவர் இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 11 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்காக காலை காரில் விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்ஞம் செல்கிறார். விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சார்பானந்த சோனாவால் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
Update: 2025-05-02 03:50 GMT