ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் உள்பட ரூ.738... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
ராமநாதபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேராவூர் பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் பங்கேற்க நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 9.45 மணி அளவில் அங்கிருந்து விழா நடைபெறும் மேடைக்கு வருகிறார். அந்த திடலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார். பின்னர் மாவட்ட தொழில் மையம், தாட்கோ துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட பலருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கலந்துரையாடுகிறார்.
Update: 2025-10-03 03:47 GMT