சென்னையில் இன்று இரவுடன் மழை ஓயும் - வானிலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
சென்னையில் இன்று இரவுடன் மழை ஓயும் - வானிலை ஆய்வாளர் தகவல்
வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று இரவுடன் மழை ஓய வாய்ப்பு உள்ளது. நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் ஈரப்பதம் மாநிலம் முழுவதும் பரவுவதால், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
கடந்த நான்கு நாட்களில் எண்ணூரில் 50 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-03 05:02 GMT