மேட்டூர் அணையில் ஆய்வு மேட்டூர் அணையில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

மேட்டூர் அணையில் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் 12-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உள்ள நிலையில், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் இன்று அணையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் அணை குறித்து கேட்டறிந்தார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6,234 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 82.743 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

Update: 2025-06-04 04:38 GMT

Linked news