இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-06-04 09:38 IST


Live Updates
2025-06-04 14:19 GMT

இரண்டு கட்டங்களாக 2027ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

2025-06-04 14:16 GMT

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

2025-06-04 13:48 GMT

ஆர்சிபி ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், ஆர்சிபி வெற்றி பேரணி உயிரிழப்பு தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பெங்களூரு துயர சம்பவத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா முழு பொறுபேற்க வேண்டும். அவசர அவசரமாக வெற்றிப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடக அரசு முன்னேற்பாடுகள் செய்யவில்லை. சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார். 

2025-06-04 13:35 GMT

ஆர்சிபி கிரிக்கெட் வீரர்களை வரவேற்க குவிந்த ரசிகர்களின் கூட்டம் காரணமாக விதான் சவுதா, கப்பன் பார்க், எம்.ஜி.சாலை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டது.

2025-06-04 13:28 GMT

பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி ஒரு சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

2025-06-04 13:02 GMT

ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

2025-06-04 12:55 GMT

ஆர்சிபி ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் கொண்டாட்ட நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன. வீரர்களை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கவுரவித்து அவசர அவசரமாக மருத்துவமனை புறப்பட்டுச்சென்றார். நெரிசலில் சிக்கி சிகிச்சை பெறுவோரை சந்திக்க முதல்-மந்திரி சித்தராமையா மருத்துவமனை விரைகிறார்.

2025-06-04 12:33 GMT

மதுபான கடைகளை கூடுதலாக நிறுவுவதற்கு பதிலாக மதுவிலக்கிற்கு உறுதியான நடவடிக்கைகளை முயற்சிக்க வேண்டும். வழக்கு ஒன்றில் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை 2 வாரத்தில் மூட மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2025-06-04 11:16 GMT

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சி,டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்