கரூர் கூட்ட நெரிசல்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
கரூர் கூட்ட நெரிசல்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை
கரூரில் 41 பேர் உயிரிழந்த தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன்படி கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்த ஆம்புலன்ஸ்களை இயக்கிய ஓட்டுநர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ்கள் வந்து மயக்கமடைந்தவர்களை ஏற்றிச் சென்றது குறித்தும், 108 அவசர உதவி எண்ணுக்கு எத்தனை அழைப்புகள் வந்தன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்
Update: 2025-10-04 07:30 GMT