கலைஞர் பல்கலை. மசோதா விவகாரம்: கவர்னருக்கு எதிராக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
கலைஞர் பல்கலை. மசோதா விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி முடிவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில் தமிழக அரசு, "கவர்னர் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டப்பேரவை முடிவுக்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-10-04 11:07 GMT