வைகோ மருத்துவமனையில் அனுமதிமதிமுக பொதுச்செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதனையடுத்து வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு நாட்களில் வைகோ மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-04 13:35 GMT