கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்களுக்கு வழங்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே
கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தற்காப்புக்காக பெண்களுக்கு அதிமுக சார்பில் பெப்பர் ஸ்பிரே விநியோகிக்கப்பட்டது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கப்பட்டது.
Update: 2025-11-04 07:10 GMT