சென்னையில் 39 விமானங்களின் சேவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025

சென்னையில் 39 விமானங்களின் சேவை ரத்து 



சென்னையில் நேற்று(டிச.3) இரவில் இருந்து இன்று (டிச.4) காலை வரை 39 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் புறப்பாடு விமானங்கள் 19, வருகை விமானங்கள் 20 அடங்கும். விமானிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2025-12-04 04:35 GMT

Linked news